Explore Categories

 

 PDF

TallyPrime மற்றும் TallyPrime Edit Log Release 4.1 க்கான Release notes | புதிதாக என்ன இருக்கிறது

TallyPrime மற்றும் TallyPrime Edit Log Release 4.1 பின்வருவனவற்றின் மூலம் உங்களுக்கு மிகுந்த உற்சாகக்கதையும் மகிழ்ச்சியையும் தருகிறது:

  • ஒரு Company மற்றும் அதன் MSME சப்ளையர்களுக்கு MSME Udyam number பதிவு செய்வதற்க்கான வழி வகை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், MSME சப்ளையர்களுக்குச் செலுத்தப்படாத அனைத்து பில்களின் விவரங்களையும் விரைவாகச் சேகரிக்கவும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 43b(h) க்கு எளிதாக இணங்குவதற்கு தேவையான தகவல்களை பெறுவதற்கும் உதவுகிறது.
  • GSTR-1 இல் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றங்களின்படி, GST ரிட்டர்ன்காலத்திலுள்ள அனைத்து ஆன்லைன் விற்பனைகளின் பட்டியலை உருவாக்கும் வசதியுள்ளது.

MSME

புதிய MSME அம்சத்தின் மூலம், MSMEகள் மற்றும் MSMEகளுடன் வர்த்தகம் செய்யும் வணிகங்கள் MSME நிலையை அடையாளம் கண்டு, சரியான நேரத்தில் பணம் செலுத்துவதற்கான நிலுவையிலுள்ள பில்களைக் கண்காணிக்க முடியும். மேலும், MSME களில் இருந்து கொள்முதல் செய்பவர், தாமதமான MSME பேமெண்ட்களின் முழு விவரங்களுடன் தங்கள் Form MSME 1ஐ விரைவாக தாக்கல் செய்யலாம். வருமான வரிச் சட்டத்தின் 43b(h) உடன் இணங்குவதற்கு, கொள்முதல் செய்பவர் எளிதாக பில்களின் பட்டியலை உருவாக்க முடியும்.

Registered MSME வணிகங்கள்:

  • டிபார்ட்மென்டிலிருந்து பெறப்பட்ட UDYAM registration விவரங்களை பதிவு செய்யலாம். மேலும், அவர்கள் விவரங்களை மாற்றலாம் மற்றும் இதுபோன்ற அனைத்து மாற்றங்களையும் தேதிகளுடன் கண்காணிக்கலாம்.
  • உங்கள் MSME நிலையைப் பற்றி வாங்குபவர்களுக்குத் தெரிவிக்க, UDYAM registration விவரங்களை நீங்கள்ப்ரிண்ட் செய்யலாம்.
  • நிலுவையில் உள்ள அல்லது தாமதமான வரவுகளின் (receivables) விவரங்களை விரைவாகப் பெற்று, சரியான நேரத்தில் பணம் பெற ரிமைண்டர்களை அனுப்பலாம்.

MSMEகளுடன் வர்த்தகம் செய்யும் வணிகங்கள்:

  • சப்ளையர்களின் MSME நிலையை பதிவு செய்யலாம்.
  • MSMEகள் தொடர்பான பில்களைக் கண்டறிந்து, வட்டியைத் தவிர்ப்பதற்காக நிலுவைத் தேதிக்கு முன் பணம் செலுத்தலாம்.
  • தாமதமான MSME பேமெண்ட் தொடர்பான தகவல்களை உடனடியாகப் பெற்று, MSME-1 படிவத்தில் பதிவு செய்யலாம்.
  • MSMEகளுக்குச் செலுத்தப்படாத அனைத்து பில்களின் விவரங்களையும் எளிதாக பெறலாம். இதன்மூலம் உங்களுடைய வருமான வரிச் சட்டத்தின் 43b(h)ன்படி எவ்வளவு அனுமதிக்கப்படும் என்பதை கணிக்கலாம்.

இ-காமர்ஸ் சம்மரி ரிப்போர்ட் மூலம் ஆன்லைன் விற்பனையின் விவரங்கள்

Amazon, Myntra மற்றும் Flipkart போன்ற e-Commerce operators மூலம் ஆன்லைன் விற்பனை செய்யும் வணிகங்களுக்கு, GSTR-1 இல் ஆன்லைன் விற்பனை அறிக்கை தொடர்பான சில மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களை கையாள்வதற்க்கு, TallyPrime Release 4.1 ல் e-Commerce Summary கொடுக்கப்பட்டுள்ளது:

  • வரி விதிக்கக்கூடிய மதிப்புகள் மற்றும் IGST, CGST, SGST மற்றும் Cess போன்ற வரித் தொகைகளின் பிரிவு
  • e-Commerce operators க்கான ஜிஎஸ்டிஐன் வாரியான விற்பனை.

இதன் மூலம், ஜிஎஸ்டி போர்ட்டலில் விவரங்களை எளிதாக பதிவிட இந்த அறிக்கை உங்களுக்கு உதவும்

Post a Comment

Is this information useful?
YesNo
Helpful?