Explore Categories

 

 PDF

டேலி ப்ரைம் மற்றும் டேலி ப்ரைம் எடிட் லாக் ரிலீஸ் 3.0க்கான ரிலீஸ் நோட் | என்ன புதுமை!

TallyPrime Release 3.0 உங்களுக்கு பல்வேறு வகையான பயனுள்ள அம்சங்களான, ரிப்போர்ட்  பில்டர் ஐ பயன்படுத்தி எளிதான data analysis மற்றும் உங்கள் வாடிக்கையாளருக்கு payment requests அனுப்பும் வசதி மற்றும் சிறந்த data management அனுபவத்தை வழங்குகிறது. மேலும், மேம்படுத்தப்பட்ட GST அம்சங்களுடன், ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-2A  மற்றும் ஜிஎஸ்டிஆர்-2B reconciliation ஆகியவற்றுக்கான எளிதான அனுபவம் உட்பட, TallyPrime Release 3.0 ப்ராடுக்ட் உங்களுக்கு எல்லா வகையிலும் எளிமையையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

கூடுதலாக  2023-24 நிதி பட்ஜெட்டின்படி (Finance Budget), Income Tax Computation ரிப்போர்ட் சமீபத்திய வருமான வரி அடுக்கு விகிதங்களுடன் (income tax slab rates) புதுப்பிக்கப்பட்டது.

GST

உங்கள் ஜிஎஸ்டி அனுபவத்தை டேலி ப்ரைம் மற்றும் டேலி பிரைம் எடிட் லாக் ரிலீஸ் 3.0 மகிழ்வும் சுகமும் கொண்ட ஒன்றாக்கும்.

இப்போது இந்த ப்ராடக்டில் ஒரே கம்பெனி டேட்டாவில் பல ஜிஎஸ்டி பதிவுகளை நிர்வகிக்கும் வசதியும் குறிப்பிட்ட ஒன்றுக்கு அல்லது எல்லா ஜிஎஸ்டி பதிவுகளுக்குமான நடவடிக்கைகளைப் பதியவும் அறிக்கைகளைப் பார்க்கவும் உங்களுக்கு முடியும். இது ஜிஎஸ்டி நடவடிக்கைளைப் பதியும் முறையை எளிமைப்படுத்துவதோடு அனைத்து நடவடிக்கைகளுக்கான வரி பொறுப்புகளைத் தானாக கணக்கிடுதல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வரிப் பகுப்பாய்வு அனுபவத்தையும் தருகிறது.

ஒவ்வொரு மாஸ்டரிலும் தனித்தனியே ஜிஎஸ்டி விகிதம், ஹெ.எஸ்.என் / எஸ்.ஏ.சி. விவரங்கள் தரும் வசதி மற்றும் ஜிஎஸ்டிக்கான நடவடிக்கைகளில் முன்னிருக்கும் மதிப்புகளை மாற்றும் அனுபவமும் உங்களுக்கு இன்னும் எளிமையாகும். 

வரிப் பொறுப்புகள் அல்லது உள்ளீட்டு வரி வரவுக்காக (ITC) ஜர்னல் வவுச்சர்கள் போடாமல் நடவடிக்கைகளில் இருக்கும் மதிப்புகளை வைத்தே ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை இந்த ப்ராடக்ட் கவனமாக அப்டேட் செய்யும். இருந்தாலும், தேவைப்பட்டால் ஜர்னல் வவுச்சர் போடும் முறையைத் தொடரும் நெகிழ்வும் உங்களுக்கு உண்டு.

மேலும், உங்களால் GSTR-1, GSTR-2A மற்றும் GSTR-2B நடவடிக்கைகளை மிக எளிமையாக ரெக்கன்சைல் பண்ண முடியும். ஜிஎஸ்டி தொடர்பான தகவலை ரீசெட் செய்யும் வசதியால், ஏதாவது தவறான பொருத்தங்கள் (mismatches) இருந்தால், ஜிஎஸ்டி போர்ட்டலில் இருந்து ரிக்கன்சைல் செய்வதற்காக இறக்கிய ஜிஎஸ்டி டேட்டாவை அழித்து விட முடியும். பிறகு நீங்கள் ஜிஎஸ்டி போர்ட்டல் தகவலுக்குப் பொருந்தும் மதிப்புகளை மீண்டும் தந்து போர்ட்டலில் இருந்து தகவலை திரும்பவும் இறக்கி நடவடிக்கைகளை ரிக்கன்சைல் செய்யலாம்.

பேமெண்ட் ரெகுஸ்ட் (Payment Request)

TallyPrime இப்போது பேமெண்ட் ரெகுஸ்ட் (Payment Request ) அம்சத்துடன் வருகிறது, இது பேமெண்ட் லிங்கை மற்றும் QR குறியீடுகளை (பேமெண்ட் கேட்வே அல்லது UPI ஐப் பயன்படுத்தி) உடனடியாக உருவாக்கவும் மற்றும் எளிதாக பகிரவும் உதவும். இந்த அம்சம், உங்களுடைய பார்ட்டிகள், உங்களுடன் உடனடியாகவும் எளிதாகவும் பணம் செலுத்துவதற்கு உதவும்.

Data Exchange and Data Management

அதோடு கூட, தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட அல்லது எல்லா ஜிஎஸ்டி பதிவுகளுக்குமான நடவடிக்கைகளை இறக்கவும் ஏற்றவும் டேட்டா எக்சேஞ்ச் உதவுகிறது.

இதில் இருக்கும் முற்றிலும் புதுமையான ரிப்போர்ட் ஃபில்டர்கள் மிகச் சில க்ளிக்கள் மூலம் ரிப்போர்ட்களில் தேவைப்படும் எல்லா விவரங்களையும் விரல் நுனியில் தருவதால் இவற்றின் உதவி கொண்டு தேவையான தகவலை மிக விரைவாகப் பெறுவதோடு வியாபாரத் தகவலை ஆய்ந்து பார்க்கவும் முடியும்.

ஒரு ப்ராசஸ் துவங்கும் போதும் முடிக்கும் போதும் சம்மரி ரிப்போர்ட் உங்களுக்கு மாஸ்டர், வவுச்சர்கள் பற்றிச் சொல்வதால்,  மைக்ரேசன், ரிப்பேர், இம்ப்போர்ட் மாதிரியான டேட்டா மானேஜ்மெண்ட் நடவடிக்கைகள் மிகச் சீராகும். இன்னொரு வகையில், ஒரு ப்ராசசில் ஏற்படும் தவறுகளைக் கண்டுபிடிப்பதும் சரி செய்வதும் மிக எளிமையாகும்.

நீங்கள் டேலி ப்ரைம் எடிட் லாக் பயன்படுத்துபவராக இருந்தால் டேலி ப்ரைம் எடிட் லாக் ரிலீஸ் 3.0 வை டவுன்லோட் செய்யலாம்.

டேலி ப்ரைம் மற்றும் டேலி ப்ரைம் எடிட் லாக் ரிலீஸ் 3.0 வின் சிறப்பம்சங்கள்

ஒரே நிறுவனத்தின் பல ஜிஎஸ்டி பதிவுகள்

பல ஜிஎஸ்டி பதிவுகளை ஒரு கம்பெனி டேட்டாவில் வைப்பதால், அந்தக் கம்பெனியின்  ஜிஎஸ்டி ரிப்போர்ட்களை வைத்தே ஒவ்வொரு ஜிஎஸ்டி பதிவிற்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன்களையும் தனித்தனியே தாக்கல் செய்ய முடிகிற எளிமையான அனுபவம் ஏற்படும். வெவ்வேறு ஜிஎஸ்டி பதிவுகளுக்கு வெவ்வேறு கம்பெனி டேட்டாவைப் பராமரிக்கும் சிக்கலிலிருந்து இது உங்களைக் காப்பாற்றுகிறது. ஒரு கம்பெனி டேட்டாவில் இருந்தே எல்லா ஜிஎஸ்டி பதிவிற்குமான ஜிஎஸ்டி ரிட்டர்களையும் தயாரிப்பதால் இது காலப் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கிறது.

ஒரே நிறுவனத்தில் எல்லா ஜிஎஸ்டி பதிவுகளையும் பராமரிப்பதோடு, நீங்கள் இப்போது பின்வருவனவற்றையும் செய்யலாம்:

  • கீழ்வருவனவற்றோடு கம்பெனியில் ஜிஎஸ்டி பதிவுகளை உருவாக்கலாம்:
    • மாநிலம், முகவரி வகை, பதிவு வகை மற்றும் ஜிஎஸ்டி / யுஐஎன் மாதிரியான எல்லா ஜிஎஸ்டி பதிவு விவரங்கள்
    • ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அளவு
    • பொருள் வழங்கும் இடம்
    • இ-இன்வாய்ஸ் மற்றும் இ-வே பில்லின் பொருத்தப்பாடு
    • ரிக்கன்சிலியேசனின் வடிவமைப்பு
    • எல்.யூ.ட்டி விவரங்கள், தேவைக்கேற்ப
    • ஜிஎஸ்டி பதிவு தொடர்பான மற்ற விவரங்கள்
  • நடவடிக்கைகளைத் தகுந்தவாறு பதியவும்:
    • குறிப்பிட்ட ஜிஎஸ்டி பதிவிற்குப் பொருந்தும் ஜிஎஸ்டி விதிகள்
    • ஜிஎஸ்டி பதிவுகளில் கொடுத்திருக்கும் ஜிஎஸ்டிஐஎன் / யூஐஎன் மற்றும் முகவரி மாதிரியான விவரங்கள்
  • முரண்படும் வவுச்சர் எண்களைத் தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு ஜிஎஸ்டி பதிவிற்கும் வவுச்சர் எண் வரிசைகளை உருவாக்கவும்
  • உங்களின் உடனடி பார்வைக்காக அதி வேகத்தில் காட்டப்படும் ஜிஎஸ்டி ரிட்டர்ன் ரிப்போர்ட்களைத் திறக்கவும்
  • தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட ஜிஎஸ்டி பதிவுக்கான அல்லது அனைத்து பதிவுகளுக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன்கள்களை ஏற்றுமதி செய்யவும்
  • குறிப்பிட்ட ஜிஎஸ்டி பதிவிற்கான இ-இன்வாய்ஸ் மற்றும் இ-வே பில் நடவடிக்கைகளுக்கான சரிபார்ப்புத் தகவலைப் (credentials) பயன்படுத்தவும்.

கூடுதலாக, ஒருவேளை சஷ்பென்சன் அல்லது சரண்டர் ஏற்பட்டால் ஒரு குறிப்பிட்ட ஜிஎஸ்டி பதிவை டீஆக்டிவேட் செய்யலாம். மற்றும் தேவைப்படும் போதெல்லாம் ஜிஎஸ்டி பதிவை ரீஆக்டிவேட் செய்யும் நெகிழ்வுத்தன்மை உங்களுக்கு உள்ளது. 

ஜிஎஸ்டி விவரங்களைக் குறிப்பிடுவது

இப்போது உங்களுக்கு ஜிஎஸ்டி விகிதம் மற்றும் எச்.எஸ்.என் / எஸ்.ஏ.சி தொடர்பான விவரங்களை தேவைக்கேற்ப வெவ்வேறு வகையான மாஸ்டர்களில் தனித்தனியாக குறிப்பிடும் மற்றும் புதுப்பிக்கும் நெகிழ்வுத்தன்மை உள்ளது. ஒருவருக்கான ஜிஎஸ்டி பதிவு விவரங்களைப் புதுப்பிப்பது கூட எளிதாகி விட்டது. மேலதிமாக, ஸ்டாக் ஐட்டம், ஸ்டாக் குரூப், லெட்ஜர், குரூப் மாதிரியான எந்த மாஸ்டரிலும் வரி விகிதங்களைத் தேவைக்கேற்பக் குறிப்பிடலாம். 

ஜிஎஸ்டி விகிதம் மற்றும் எச்.எஸ்.என் / எஸ்.ஏ.சி விவரங்கள்

உங்கள் தேவைக்கேற்ப தனித்தனி மாஸ்டர்களில் எண்டர் செய்ய முடிவதால் ஜிஎஸ்டி விகிதம் மற்றும் எச்.எஸ்.என் / எஸ்.ஏ.சி விவரங்களை எண்டர் செய்வது ஆக எளிதாகிறது. இன்னொரு விதத்தில், வவுச்சர் உருவாக்கத்தின் போது விவரங்களை மாற்றுவதற்கான வசதி சிறந்த நெகிழ்வுத்தன்மையைத் தருகிறது.

உங்களால் இப்போது:

  • F11 கம்பெனி ஃபீச்சர்ஸில் இருந்தே ஜிஎஸ்டி விகிதம் மற்றும் எச்.எஸ்.என் / எஸ்.ஏ.சிக்கான மூலத்தைப் அமைக்க முடியும். தொடர்ந்து, நீங்கள் ஒரு வவுச்சரை உருவாக்கும்போது, ஜிஎஸ்டி விகிதம் மற்றும் எச்எஸ்என் / எஸ்ஏசி விவரங்கள்  நிறுவனத்தின் F11 கம்பெனி ஃபீச்சரின் கீழ் அமைக்கப்பட்ட மூலத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.
  • ஜிஎஸ்டி விகிதத்தைப் புதுப்பிக்க ஒரு ஸ்டாக் ஐட்டம் மாஸ்டரையும் எச்எஸ்என் / எஸ்ஏசி விவரங்களுக்கு  இன்னொரு  ஸ்டாக் ஐட்டம் மாஸ்டரையும் தேர்ந்தெடுக்கலாம். 
  • ஜிஎஸ்டி மற்றும் எச்.எஸ்.என் / எஸ்.ஏ.சி விவரங்களை வேறு எந்த மாஸ்டரிலோ அல்லது வவுச்சர் உருவாக்கத்தின் போதோ மாற்றலாம்.

ஜிஎஸ்டி பதிவு விவரங்கள்

நீங்கள் இப்போது ஒரு மாஸ்டரின் பதிவில் கொடுத்திருந்த ஜி.எஸ்.டி பதிவு விவரங்கள் (ஜிஎஸ்டிஐஎன் மற்றும் பதிவு வகை மாதிரியானவை) மற்றும் அஞ்சல் விவரங்களைக் (முகவரி, மாநிலம் அல்லது நாடு மாதிரியானவை) கீழுள்ளவற்றில் எந்த தாக்கமும் இல்லாத வகையில் புதுப்பிக்கலாம்:

  • முன்னர் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகள்
  • சென்ற மாதங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட்டர்ன்ஸ்

இன்னும் என்னவென்றால், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வசதியால் ஜிஎஸ்டி பதிவு விவரங்களில் செய்த அப்டேட்டின் வரலாற்றையும்  உங்களால் பார்க்க முடியும்:

  • ஜிஎஸ்டி பதிவு விவரங்களில் செய்த அப்டேட்களின் தன்மை
  • அப்டேட் நடைபெற்ற நாள்

மாஸ்டர்களில் ஸ்லாப் விகிதம்

பொருட்கள் அல்லது சேவைகளின் தொகைக்கு ஏற்ப மாறும் ஜிஎஸ்டி ஸ்லாப் விகிதங்களை ஸ்டாக் ஐட்டம் தவிர தேவைக்கேற்ப ஸ்டாக் குரூப், லெட்ஜர் மற்றும் கம்பெனியில் உங்களால் குறிப்பிட முடியும்.

ஜிஎஸ்டி நடவடிக்கைகள்

டேலிபிரைம் அந்தந்த மாஸ்டர்களில் தரப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் மற்றும் எச்எஸ்என் / எஸ்ஏசி விவரங்களை எடுத்துக் கொள்வதாலும் வவுச்சர் உருவாக்கத்தின் போது தேவைக்கேற்ப விவரங்களை உங்களால் மிக எளிதாக மாற்ற முடிவதாலும் ஒரு நடவடிக்கையில் வரியைக் கணக்கிடுவது எளிதாகிறது.

டேலி ப்ரைம் ரிலீஸ் 3.0  உடன் உங்களால் இப்போது முடியும்:

  • ஒரே கம்பெனி டேட்டாவில் பல ஜிஎஸ்டிபதிவுகளை வைத்துக் கொண்டு அவற்றில் ஏதாவது ஒரு பதிவிற்கு மட்டும் நடவடிக்கைகளப் பதியலாம் 
  • ஒவ்வொரு லெட்ஜரிலும் செய்வதற்குப் பதிலாக நடவடிக்கையின் தன்மையை வவுச்சரில் அமைக்கலாம்.
  • ஜிஎஸ்டி வ்கிதங்கள் மற்றும் எச்.எஸ்.என் / எஸ்.ஏ.சி கோடுகளை மிக எளிமையாக நடவடிக்கைகளில் மாற்றலாம்.
  • ஒரு நடவடிக்கையின் ஜிஎஸ்டி தகுதியை தேவைக்கேற்ப சரிக்கட்டப்பது, சரிக்கட்டப்படாதது, பொருந்தாதது, விலக்கப்பட்டது என மாற்றலாம். இதையே நீங்கள் ஜிஎஸ்டிஆர்-2A ரிக்கன்சிலியேசனில் பல நடவடிக்கைகளுக்கும் செய்யலாம்.
  • ரிட்டர்ன் எஃபெக்டிவ் டேட்டை மாற்றுவதன் மூலம் ஒரு வுவச்சரை எளிமையாக வேறொரு ரிட்டர்ன் காலத்திற்கு நகர்த்தலாம்.  இதையே நீங்கள் ஜிஎஸ்டிஆர்-1, ஜிஎஸ்டிஆர்-3B, ஜிஎஸ்டிஆர்-2A ரிக்கன்சிலியேசனில் பல நடவடிக்கைகளுக்கும் செய்யலாம்.
  • ரிட்டர்னை கையொப்பமிடப்பட்து என குறிப்பதன் மூலம் கையொப்பமிட்ட பிறகு செய்யப்படும் மாற்றங்களைக் கண்டுபிடிக்கலாம்.
  • ரிட்டர்ன் எஃபெக்டிவ் டேட்டில் எதிர்காலத் தேதியைத் தருவதன் மூலம் ஒரு வவுச்சரை மாற்றலாம்.
  • உங்கள் வணிகச் சூழல், நடைமுறைகளைப் மிகப் பெருமளவில் உள்ளடக்கும் விரிந்த அளவிலான சட்டப்பூர்வ சரி செய்யும் (statutory adjustments) விருப்பங்களின்  மூலம் ஜிஎஸ்டிக்கான சீரமைவுகளைச் செய்யலாம். சட்டப்பூர்வ சரி செய்தலுக்காகத் தரப்பட்டுள்ள விருப்பங்களில் வரிப் பொறுப்பு அதிகரிப்பு, உள்ளீட்டு வரி வரவு அதிகரிப்பு, வரிப் பொறுப்பும் உள்ளீட்டு வரி வரவும் அதிகரிப்பு மற்றும் பிறவும் அடங்கும்.
  • ஜிஎஸ்டி பதிவு விவரங்களை ஒரு மாஸ்டரிடமிருந்து நடவடிக்கைக்குத் தங்குதடையின்றி காப்பி செய்யலாம்.
    ஜிஎஸ்டி பதிவு விவரத்தில் அடங்குபவை:
    • கம்பெனியின் ஜிஎஸ்டி பதிவு விவரங்கள் (திருத்த முடியாதவை)
    • பார்ட்டிகளின் ஜிஎஸ்டி பதிவு விவரங்கள்
    • வரி விகித விபரங்கள்
    • ஹெச்எஸ்என் / எஸ்.ஏ.சி விவரங்கள்
    • அச்சபிள் வேல்யூவில் சேர்க்கும் அமைப்பு
  • ஒரு வவுச்சருக்கான ஜிஎஸ்டி, இ-இன்வாய்ஸ், இ-வே பில்  டேட்டாவை அப்படியே போர்ட்டலில் இருப்பது போலவே பார்க்கலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள வசதிகளைத் தவிர, நீங்கள்:

  • மெட்டீரியல் இன் மற்றும் மெட்டீரியல் அவுட் வவுச்சர்களில் ஜிஎஸ்டியைக் கணக்கிடலாம்
  • பர்சேஸ் வவுச்சர்களில் வரிப் பகுப்பாய்வினைப் பார்க்கலாம்
  • உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சப்ளையர்களுக்கான வழங்கும்  இடத்தைத் தேர்ந்தெடுக்கலாம்

இன்னும் என்னவென்றால், ஜிஎஸ்டி ரிட்டர்ன்களைப் பாதிக்கும் வகையில் ஒரு மதிப்பை நீங்கள் மாற்றி வவுச்சரை மீண்டும் சேவ் செய்யும் போது டேலி ப்ரைம் கீழ்க்காணும் முடிவுகளைக் காட்டுவதால் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:

  • மதிப்புகளில் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொண்டு பொருத்தமின்மையை பின்னர் தீர்க்கவும்.
  • மதிப்புகளில் உள்ள வேறுபாட்டை ஏற்றுக்கொண்டு  அதே நேரம் அந்த வவுச்சர் பொருந்தாது என்பதை ஏற்காததை உறுதி செய்யவும்.
  • தேவைப்பட்டால் மீண்டும் வவுச்சருக்கே போய் பழைய மதிப்புகளைத் திரும்ப் பெறலாம்.

ஒரு வவுச்சர் டைப்பிற்கான இயல்பான ஜிஎஸ்டி பதிவு

பல ஜிஎஸ்டி பதிவுகள் இருந்தால், ஒரு குறிப்பிட்ட வவுச்சர் டைப்புக்கு டிஃபால்ட்டாக ஒரு ஜிஎஸ்டி பதிவை அமைக்கலாம்.

எடுத்துக்காட்டாக,  நீங்கள் ஒரு குறிப்பிட்ட அலுவலகம் அல்லது இருப்பிடத்திற்காக எல்லா ஜர்னல் வவுச்சர்களையும் பதிவு செய்தால், அந்த இடத்திற்கான ஜிஎஸ்டி பதிவை அந்த வவுச்சர் டைப்பிற்கான டிஃபால்ட்டாக அமைக்கலாம்.

தொடர்ந்து நீங்கள் வவுச்சரை உருவாக்கும்போது, வவுச்சர்  டைப்பிற்கான டிஃபால்ட் ஜிஎஸ்டி பதிவே தேர்வாவதால் ஜிஎஸ்டி பதிவுகளுக்கு இடையில் மாறுவதற்கு எடுக்கும் நேரம் மிச்சமாகும்.

அசல் வவுச்சர்ருக்கான ஆட்டோமேட்டிக் அல்லது மல்ட்டி-யூசர் ஆட்டோ வவுச்சர் எண்களைத் தக்கவைத்தல்

ஆட்டோமேட்டிக் அல்லது மல்ட்டி-யூசர் முறையில் எண்ணிட்ட வவுச்சர் டைப்புகளில் வவுச்சர்களை நுழைக்கும் போது அல்லது அழிக்கும் போது டேலி ப்ரைம் அசல் வவுச்சர் எண்ணைத் தக்க வைக்கிறது.

இது நடவடிக்கைகளின் வவுச்சர் எண்கள் நுழைத்தல், அழித்தலைத் தாண்டி சரியாக இருப்பதை உறுதி செய்கிறது.

இருந்தாலும்  உங்கள் வணிகத்தில் வழக்கம் இருக்குமானால், வவுச்சர்களை நுழைக்கும் அல்லது அழிக்கும் போது மறு எண்ணிடும் முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஒரு ஜிஎஸ்டி பதிவிற்கான வவுச்சர் தொடர்

பல ஜிஎஸ்டி பதிவுகளைக் கொண்ட கம்பெனிகளில், டேட்டாவிலும் ரிட்டர்ன்களிலும் அதே எண்ணால் வரும் சிக்கல் எதுவும் இல்லாமல் ஒவ்வொரு பதிவு மற்றும் வவுச்சர் டைப்புக்கும் வவுச்சர் எண் வரிசையை நீங்கள் உருவாக்கலாம்.

ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ்

டேலி ப்ரைம் 3.0 உங்கள் உடனடி பார்வைக்காக ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை மிக விரைவாக திறக்க உதவுகிறது. மேலும், ஜிஎஸ்டிஆர் -1 மற்றும் ஜிஎஸ்டிஆர் -3 பி போன்ற ஜிஎஸ்டி அறிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளாதால் ஜிஎஸ்டி ரிட்டர்களைத் தாக்கல் செய்வது எல்லாவற்றிலும் எளிமையாவதால் உங்களுக்கு கீழுள்ளவை எளிதாக முடியும்:

  • தேவைக்கேற்ப ஒரு குறிப்பிட்ட ஜிஎஸ்டி பதிவு அல்லது அனைத்து ஜிஎஸ்டி பதிவுகளுக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன்களைப் பார்க்கலாம்.
  • ஜிஎஸ்டி ரிட்டர்ன் ஆக்டிவிட்டிஸ்  ரிப்போர்ட்டைப் பயன்படுத்தி எல்லாக் காலகட்டங்களிலும் தாக்கல் செய்ய நிலுவையில் உள்ள எல்லா நடவடிக்கைகளையும் கண்டுபிடிக்கலாம்.
  • நிச்சயமற்ற நடவடிக்கைகளை மிகவும் எளிதாக தீர்க்கலாம்.
  • வரி சம்மந்தப்பட்ட மதிப்புகளுக்குப் பொருந்தாத போதும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டு அப்படியான நடவடிக்கைகளை அதற்கான Transactions Accepted As Valid  ரிப்போர்ட்டின் மூலம் காணலாம்.
  • குறிப்பிட்ட நடவடிக்கைகளை வேறு ரிட்டர்னுக்கான காலத்திற்கு நகர்த்த விரும்பினால், ஒன்றுக்கு மேற்பட்ட நடவடிக்கைகளுக்கு ரிட்டர்ன் எஃபெட்டிவ் டேட்டைத் தரலாம்.
  • தேவைப்பட்டால் கையொப்பமிடப்பட்ட ரிட்டர்னில் இருந்து ஒரு நடவடிக்கையைப் புதிய ரிட்டர்ன் எஃபெட்டிவ் டேட்டுடன் மாற்றலாம்.
  • ஏற்றுமதி செய்த பின்னர் மாற்றப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட நடவடிக்கைகளை அடையாளம் காணவும். 
  • TRACK GST Return Activities ரிப்போர்ட்டைப் பார்த்து: 
    • நிச்சயமற்ற நடவடிக்கைகளைத் தீர்த்தல், ஏற்றுமதி மற்றும் கையொப்பமிடுதல் போன்ற நிலுவையில் உள்ள நடவடிக்கைகளை அடையாளம் காணுங்கள்.
    • ரிட்டர்ன்களை தகுந்த நேரத்தில் தாக்கல் செய்ய  இந்த நடவடிக்கைகளை முடிக்கும் வேலைகளைச் செய்யவும். 
  • பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப தோன்றும் தொடர்புடைய சட்டப் பிரிவுகள் மற்றும் செய்ய வேண்டிய வேலைகள் புதுப்பிக்கப்படும் ரிப்போர்ட்டைப் பார்க்கவும்.
  • பல்வேறு காலகட்டங்களில் நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் பொன் நிறத்தில் முன்னிறுத்தப்படுவதை அடையாளம் காணவும்.
  • ஏற்றுமதி செய்ய வேண்டிய ரிட்டர்னுக்கான தகவலை மதிப்பீடு செய்ய ப்ரிவ்யூ ரிப்போர்ட்டைப் பார்க்கவும்.
  • தேவைக்கேற்ப குறிப்பிட்ட ஜிஎஸ்டி பதிவு அல்லது அனைத்து பதிவுகளுக்கான ஜிஎஸ்டி ரிட்டர்ன்களை ஏற்றுமதி செய்யவும். டாப் மெனுவிலுள்ள Exchange லிருந்து நீங்கள் அப்படி செய்யலாம்:

    • பல ஜிஎஸ்டி பதிவுகள் இருந்தால், அனைத்து ஜிஎஸ்டி பதிவுகளுக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட ஜிஎஸ்டி பதிவுக்கு
    • தேவைக்கேற்ப பிரிவு வாரியான JSON ஃபைல்களுடன்.
    • JSON, MS Excel, அல்லது CSV என நீங்கள் தேர்தெடுக்கும் வடிவத்தில்
    • இது ஜிஎஸ்டி போர்ட்டலில் இருக்கும் எக்செல் யுட்டிலிட்டிக்குச் சரியாக ஒத்திருப்பதால், ஜிஎஸ்டிஆர் -3 B தாக்கல் செய்வதை மிக எளிதாக்குகிறது.

GSTR-1, GSTR-2A மற்றும் GSTR-2B இல் பரிவர்த்தனைகளை ரிக்கன்சிலியேசன்

GSTR-1, GSTR-2A மற்றும் GSTR-2B ஆகியவற்றில் உங்கள் பரிவர்த்தனைகளை உங்கள் சப்ளையர்களின் பரிவர்த்தனைகளுடன் ரிக்கன்சைல் செய்யும் அனுபவம் மேலும் எளிதாகிவிட்டது. உங்கள் புத்தகங்களில் உள்ள தகவல்கள் ஜிஎஸ்டி போர்ட்டலில் உள்ள தகவல்களுடன் பொருந்துவதை இது உறுதி செய்கிறது. மேலும், உங்கள் புத்தகங்களில் ரிக்கன்சைல் செய்யப்படாத பரிவர்த்தனைகளுக்கு சாத்தியமான பொருத்தங்களை அடையாளம் காணும் வசதி, ரிக்கன்சிலியேசனை எளிதாக்க உதவுகிறது.

நீங்கள் இப்போது கீழ்வருவனவற்றையும் செய்யலாம்:

  • GSTR-1, GSTR-2A மற்றும் GSTR-2B க்கான JSON கோப்புகளை இறக்குமதி செய்யலாம்.
  • கீழுள்ள பரிவர்த்தனைகளை ரிக்கன்சைல் செய்யலாம்:
    • நீங்கள் ரிட்டர்ன் எஃபெக்டி டேட்டைப் புதுப்பிப்பதன் மூலம், பரிவர்த்தனைகள் வேறு ரிட்டர்னுக்கான காலத்திலிருந்து இருந்தாலும், GST போர்ட்டலில் உங்கள் பரிவர்த்தனைகளை இறக்குமதி செய்யுது, அதிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். 
    • பொருத்தமின்மைக்கான வரம்பைக் குறிப்பிடும்போது.
    • GSTR-2A மற்றும் GSTR-2B இல் டாக்குமெண்ட் நம்பரில் உள்ள பூஜ்ஜியங்கள் அல்லது சிறப்பு எழுத்துக்களின்  ப்ரீவிக்ஸ்  புறக்கணிக்கும்போது .
    • பார்ட்டி டாக்குமெண்ட் அல்லது இன்வாய்ஸ் நம்பர்களில் பயன்படுத்தும் ப்ரீவிக்ஸ் பயன்படுத்தி, GSTR-2A மற்றும் GSTR-2B இல் ரிக்கன்சிலியேசன் புறக்கணிக்கும் படி வடிவமைக்கும்போது.
  • தேவைக்கேற்ப பரிவர்த்தனைகளின் நிலையை பொருந்தியது அல்லது பொருத்தமற்றது என குறிப்பிடலாம் .
  • GSTR-2A மற்றும் GSTR-2B இல் சப்ளையரின் இன்வாய்ஸ் நம்பர் மற்றும் நாளை, ரிக்கன்சிலியேசனில் டாக்குமெண்ட் நம்பர் மற்றும் நாளாக எடுத்துக்கொள்ளலாம்
  • GSTR-2B இல் இன்புட் டேக்ஸ் கிரெடிட் கிடைக்காததற்கான காரணத்தைக் கண்டறியலாம்.

மேலும் என்னவென்றால், உங்கள் புத்தகங்களில் இல்லாத பரிவர்த்தனைகள் போர்ட்டலில் இருக்கும்போது அல்லது உங்கள் போர்ட்டலில் இல்லாத பரிவர்த்தனைகள் உங்கள்  புத்தகங்களில் இருக்கும்போது,  TallyPrime உங்களுக்கு பொருந்தக்கூடிய மதிப்புகள், ஆனால் வேறு டாக்குமெண்ட் நம்பர், பார்ட்டி GSTIN/UINகள் அல்லது ரிட்டர்ன் பிரிவுகள் ஆகியவற்றைக் கண்டறிய உதவுகிறது. இது பரிவர்த்தனைகளை விரைவாக ரிக்கன்சைல் செய்ய  மேலும் உதவுகிறது.

ரிப்போர்ட் ஃபில்டர்களுடன் வணிகத் தகவலை விரைந்து அணுகுதல்

தேவையான தகவலைக் கண்டுபிடிப்பதும் டேட்டா அனாலிசிசும் பல்துறை வசதியுடனான ஃபில்டர்களைப் பொருத்துவதன் மூலம் வேகமாகவும், எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆகி உள்ளது: 

  • எளிதில் கண்டுபிடிக்கக் கூடியது
  • ஒரே கிளிக்கில் அணுகக் கூடியது
  • வணிகச் சூழல்களின் எல்லைகளைத் தொடுமளவு மேம்படுத்தப்பட்து.

ஒரு அறிக்கையில், நீங்கள் இப்போது செய்யலாம்:

  • தேவைக்கேற்ப ஒரு தகவலை ஒரு நடவடிக்கை அல்லது மாஸ்டரின் கீழுள்ள எல்லா ஃபீல்டுகளின் ஊடாகவும் அல்லது ஒரு குறிப்பிட்ட ஃபீல்டில் மட்டும் தேடலாம்:
    • ஜிஎஸ்டிஐஎன் / யூஐஎன், ஜிஎஸ்டி விகிதங்கள், ஹெஎச்என் / எஸ்ஏசி மாதிரியான ஜிஎஸ்டி விவரங்கள்
    • துணை நிலையிலுள்ள ஃபீல்டுகள்
    • இ-வே பில் மற்றும் இ-இன்வாய்ஸ் தொடர்பான ஃபீல்டுகள்
  • தேவையான தகவலின் தனித்துவம் மற்றும் சிக்கலின் அடிப்படையில் பின்வரும் ஃபில்டர்கள் டைப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்:
    • விரைவான தேடுபொறி போல செயல்படும் பேசிக் ஃபில்டர்
    • தகவலைக் கண்டுபிடிக்க ஒன்றுக்கும் மேற்பட்ட தேடல் அளவுகோல்களைச் சேர்க்க உதவும் மல்ட்டி ஃபில்டர்
    • மாஸ்டர்கள் மற்றும் நடவடிக்கைகளின் ஊடாகத் தேடித் தகவலைக் கண்டுபிடிக்க தேடல் அளவுகோல்களைச் சேர்க்க உதவும் அட்வான்ஸ்ட் ஃபில்டர்
  • ஃபில்ட்டர் டீடெய்ல்களைக் க்ளிக் செய்து ஒரு ரிப்போர்ட்டில் பயன்படுத்தப்பட்ட ஃபில்ட்டர்களைப் பற்றி அறியலாம்.
  • உங்கள் நிறுவனத்தில் அடிக்கடி பயன்படுத்தியதன் அடிப்படையில்  ஒரு ரிப்போர்ட்டுக்கான டிஃபால்ட் ஃபில்ட்டரை தேர்ந்தெடுங்கள்.

இன்னும் என்னவென்றால், ஃபில்ட்டர்கள் பொருத்தப்பட்ட ரிப்போர்ட்டை சேவ் வ்யூ செய்து ஃபில்டர் செய்த தகவலை விரைந்து பார்க்கலாம்.

பேமெண்ட் ரெகுஸ்ட் (Payment Request)

TallyPrime இப்போது பேமெண்ட் ரெகுஸ்ட் (Payment Request ) அம்சத்துடன் வருகிறது, இது பேமெண்ட் லிங்கை மற்றும் QR குறியீடுகளை (பேமெண்ட் கேட்வே அல்லது UPI ஐப் பயன்படுத்தி) உடனடியாக உருவாக்கவும் மற்றும் எளிதாக பகிரவும் உதவும். இந்த அம்சம், உங்களுடைய பார்ட்டிகள், உங்களுடன் உடனடியாகவும் எளிதாகவும் பணம் செலுத்துவதற்கு உதவும்.

பேமெண்ட் ரெகுஸ்ட் (Payment Request ) பின்வரும் அம்சங்களை கொண்டுள்ளது:

  • உடனடி பேமெண்ட் ரெகுஸ்ட் (Payment Request ): உங்கள் செட்டப்பை முடித்தவுடன், பேமெண்ட் லிங் மற்றும் QR குறியீடுகளை உடனடியாக உருவாக்கி அனுப்புவதற்கு TallyPrime உதவும். இது உங்கள் வழக்கமான வணிகத்தின் பணிகளுடன் தொடர்ந்து செய்யலாம்.
    பணம் செலுத்துவது தொடர்பாக உங்கள் வணிகத்திற்குச் சிறப்புத் தேவைகள் இருக்கக்கூடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், அதற்கேற்ப, TallyPrime உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய பல நெகிழ்வுத்தன்மைகளை வழங்குகிறது.
  • தடையற்ற ரிக்கன்சிலியேசன்:  TallyPrime ல் உங்கள் பேமெண்ட் ரெகுஸ்ட் கோரிக்கைகள் அனைத்தையும் சுமூகமாக ரிக்கன்சிலியேசன் செய்வதையை எளிதாக்குகிறது.
    உங்களுக்கு பேமெண்ட் ரிக்கன்சிலியேசன் ரிப்போர்ட் மூலம் ரிக்கன்சிலியேசன் செய்யப்பட்ட மற்றும் செய்யப்படாத பரிவர்த்தனைகளின் நேர்த்தியான சுருக்கத்தை  வழங்குகின்றது.
  • டேட்டா பாதுகாப்பு: உங்கள் வணிகத்திற்கு உங்கள் நிதித் டேட்டாவின் பாதுகாப்பு மிக முக்கியமானது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் உங்கள் டேட்டா முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.

சிறந்த உயர்தர பாதுகாப்புக் கொள்கைகளை உங்களுக்கு வழங்க, முக்கிய பேமென்ட் கேட்வேகளுடன் நாங்கள் கூட்டு சேர்ந்துள்ளோம், மேலும் உங்கள் பேமெண்ட்டுகள் பாதுகாப்பான கைகளில் இருப்பதை உறுதிசெய்ய விரும்புகிறோம்.

மேம்படுத்தப்பட்ட டேட்டா மேலாண்மை அனுபவம்

மேம்படுத்தப்பட்ட டேட்டா மேலாண்மை வசதிகள் தடையற்ற ரிலீஸ் பெயர்வுக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் இடப்பெயர்வு, பழுதுபார்ப்பு, இறக்குமதி மற்றும் சின்கரைசேசனில் மேம்பட்ட எளிமையுடன் உங்களை மகிழ்விக்கின்றன. உங்களால் செயல்பாட்டின் போக்கை விரிவாகப் பார்க்கவும்  ஏதேனும் விதிவிலக்குகள் இருந்தால் தீர்க்கவும் முடியும்.

புதிய Tax Regime க்கான சமீபத்திய வருமான வரி அடுக்கு விகிதங்கள் (Income Tax Slab Rates) (Finance Budget 2023-24)

2023-24 நிதி பட்ஜெட்டின்படி (Finance Budget), புதிய Tax Regime யைத் தேர்ந்தெடுத்த எம்பிளாய்க்கு சமீபத்திய வருமான வரி அடுக்கு விகிதங்கள் (income tax slab rates) கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

TallyPrime இல், Income Tax Computation  ரிப்போர்ட், Annexure II முதல் 24Q வரை மற்றும் படிவம்-16 ஆகியவற்றுடன் பின்வருவனைகள் புதுப்பிக்கப்படுகின்றன:

  • சமீபத்திய வருமான வரி அடுக்கு விகிதங்கள் (income tax slab rates)
  • பொருந்துகின்ற Standard deduction
  • ரூ. 7 லட்சம் க்கு குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ Taxable income உள்ள எம்பிளாய்க்கு Rebate u/s 87A
  • ரூ. 5 கோடி க்கு மேல் Taxable income உள்ள எம்பிளாய்க்கு 25% குறைக்கப்பட்ட surcharge rate
  • ரூ. 7 லட்சத்திற்கு மேல் Taxable income உள்ள எம்பிளாய்க்கு, ரூ. 27,777 அல்லது அதற்கும் குறைவாக Marginal tax relief

மேலும் என்னவென்றால், regular tax regime ஐ கொண்ட எம்பிளாய்க்கு, வரிக் (tax ) கணக்கீட்டின் சிறந்த தெளிவு மற்றும் புரிதலுக்காக, வரி விதிக்கக்கூடிய வருமான அடுக்குகள் (taxable income slabs ) திட்டவட்டமான மதிப்புகளுடன் புதுப்பிக்கப்படுகின்றன.

மேம்பட்ட இடப்பெயர்வு மற்றும் பழுதுபார்ப்பு அனுபவம்

இடம்பெயர்வு மற்றும் பழுதுபார்ப்பின் நிலை

ஒரு கம்பனியை இடம்பெயர்க்க வேண்டுமா அல்லது பழுதுபார்க்க வேண்டுமா என்பதைக் கம்பனிகளுக்கு நேராகத் தோன்றும் நிலையானது உங்களுக்கு உணர்த்தும்.

இடப்பெயர்வு மற்றும் பழுதுபார்த்தலின் போக்கு

மாஸ்டர்கள் மற்றும் நடவடிக்கைகளைச் சரி பார்ப்பதில் தொடங்கி வெற்றிகரமாக பெயர்ப்பது அல்லது பழுது பார்ப்பது வரை மேம்படுத்தப்பட்ட செயல்முறை உங்களை அதன் போக்கிற்கு அருகிலேயே வைத்திருக்கிறது.

இடப்பெயர்வு மற்றும் பழுதுபார்த்தலுக்கான சம்மரியைப் பார்த்தல்

இடப்பெயர்வு அல்லது பழுதுபார்ப்பின் முடிவில், செயல் முடிவதற்கு முன்னும் பின்னுமான வவுச்சர்கள் மற்றும் மாஸ்டர்களுடன் ஒரு சம்மரியை நீங்கள் பார்க்கலாம்.

இது செயல்பாட்டின் போது ஏதாவது டேட்டா இழப்பு இருக்கிறதா என்பதை அறிய உங்களுக்கு உதவுகிறது.

செயல்பாட்டின் போது ஏற்பட்ட பிழைகளைப் பார்க்க, தீர்க்க 

இடப்பெயர்வு, பழுதுபார்த்தல், இறக்குமதி அல்லது சின்கரைசேசனின் முடிவில், உங்களால் எளிதாக:   

  • செயல்பாட்டின் போது ஏற்பட்ட விதிவிலக்குகளை அடையாளம் காண முடியும்.
  • ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதிவிலக்குகளைப் பொருந்தக்கூடிய வகையில் தீர்க்க முடியும்.

இன்னும் என்னவென்றால், உங்கள் வசதிக்கேற்ப விதிவிலக்குகளை செயல்பாட்டின் முடிவில் அல்லது பின்னர் தீர்க்கும் நெகிழ்வுத்தன்னமை உங்களுக்கு இருக்கிறது.

ஜிஎஸ்டிஎன் டேட்டாவை மீட்டமைத்தல்

நீங்கள் இறக்குமதி செய்த ஜிஎஸ்டிஎன் டேட்டா சிதைந்தாலோ அல்லது டேட்டா தற்செயலாக இறக்குமதி செய்யப்பட்டாலோ, அது ரிக்கன்சிலியேசனில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

இருந்தாலும், டேலிபிரைம் இப்போது உங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜிஎஸ்டிஎன் டேட்டாவை மீட்டமைக்கும் வசதியை வழங்குவதால் சிதைந்த ஜிஎஸ்டிஎன் டேட்டாவை அழித்து உங்கள் புத்தகத்தை சரியாக வைத்திருக்கும்.

அதன் பிறகு, நீங்கள் ஜிஎஸ்டி போர்ட்டலில் இருந்து ஜிஎஸ்டிஆர்-1 அல்லது ஜிஎஸ்டிஆர்-2Aவை  JSON ஆக இறக்குமதி செய்து  நடவடிக்கைகளை ரிக்கன்சிலியேசன் செய்யத் தொடரலாம்.

பல நிறுவனங்களை ஒரே திரையில் இணைத்தல் அல்லது துண்டித்தல்

உங்களால் இப்போது ஒரே திரையில் பல கம்பெனிகளை ஆன்லைன் ஆக்சசில் இணைக்கவும் அல்லது துண்டிக்கவும் முடிவதால் ஒன்றின் பின் ஒன்றாக கம்பெனிகளைத் தேர்ந்தெடுக்க ஆகும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

இது குறிப்பாக ரிமோட் ஆக்சஸ், சிக்ரைனைசேசன் அல்லது ப்ரவுசர் ஆக்சசிற்காக ஆன்லைனில் இணைக்க வேண்டிய பல நிறுவனங்களைக் கொண்ட வணிகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Post a Comment

Is this information useful?
YesNo
Helpful?