Explore Categories

 

 PDF

TallyPrime Release 2.1 மற்றும் TallyPrime Edit Log Release 2.1 க்கான வெளியீட்டுக் குறிப்புகள் | புதிதாக என்ன இருக்கிறது

ஒரு நிறுவனத்தின் (Company) மாஸ்டரில் (Masters) அல்லது பரிவர்த்தனையில் (Transactions) செய்யும் மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கும் Edit log (திருத்தப்பதிவு) போன்ற புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவதால் உங்கள் TallyPrime உடனான பயணம் மகிழ்வானதாகும்.

2.1 வெளியீட்டில் கீழ்க்காணும் ப்ராடக்ட்சில் (Product) ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் இணக்கத்தைத் தருகிறோம்:

  • TallyPrime Edit Log (திருத்தப்பதிவு): உங்கள் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் சிறந்த உள்கட்டுப்பாட்டிற்காக நிதியாண்டு முழுவதும் கண்காணிக்க வேண்டும் என்றால் Edit Log (திருத்தப்பதிவு) வசதியைப் பயன்படுத்தலாம். இந்த  வசதியை இதில் இருந்து நீக்கவே முடியாது.
  • TallyPrime (டேலிப்ரைம்): உள் தணிக்கை நோக்கங்களுக்காக நீங்கள் தடங்களைப் (Trail) பராமரிக்க விரும்பினால் அல்லது பதிவுகளை இடையிடையே பார்க்க விரும்பினால், உங்கள் அன்றாட வணிகச் செயல்பாடுகளில் Edit Log (திருத்தப்பதிவு) வேடு வசதியைப் பயன்படுத்தலாம்.

TallyPrime (டேலிப்ரைம்) உங்கள் பரிவர்த்தனைகள் (Transactions) மற்றும் மாஸ்டர்களின் (Masters) செயல்பாடுகள் மற்றும் மாற்றங்களைத் தானாகக் கண்காணிக்காது. தேவைப்படும் போது, Edit log (திருத்தப்பதிவு)​​ வசதியை இயக்கலாம் அல்லது நீக்கலாம். மேலும், மின்னணுக்கையொப்ப (DSC) வசதி உங்கள் ஆவணங்களை எளிமையாக அங்கீகரிக்க உதவும். எனவே, அவற்றை உங்கள் பங்குதாரர்களோடு பாதுகாப்பாகப் பகிரலாம்.

TallyPrime (டேலிப்ரைம்) மற்றும் TallyPrime Edit Log (டேலிப்ரைம் எடிட்லாக்)கின்  சிறப்பம்சங்கள்

எடிட்லாகிற்கான (Edit Log) அறிமுகம்

TallyPrime (டேலிப்ரைம்)இன் Edit log (திருத்தப்பதிவு) உங்கள் நிதித் தரவைக் கண்காணிக்க உதவுகிறது. ஏனெனில் உங்கள் பரிவர்த்தனைகள் (Transactions) மற்றும் மாஸ்டர்களில் (Masters) உள்ள செயல்பாடுகள் மற்றும் மாற்றங்களை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

TallyPrime (டேலிப்ரைம்)மின் Edit log (திருத்தப்பதிவு) கொண்டு நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • இவற்றில் நடக்கும் எல்லா நடவடிக்கைகளையும் பின் தொடரலாம்:
    • பரிவர்த்தனைகள் (Transactions): அனைத்துசான்றுச்சீட்டுகள் (Vouchers)
    • மாஸ்டர் (Masters): சரக்குகள் (Stock Items), பேரேடுகள் (Ledgers) மற்றும் கணக்குக் குழுக்கள் (Groups)
    • நிறுவனத்தரவு (Company data): தரவு மேம்படுத்தல் (Data Migration), பராமரிப்பு (Repair), தரவிறக்கம் (Import), பிரித்தல் (Split) மற்றும் இது போன்ற பிற செயல்பாடுகள்.
  • Edit log (திருத்தப்பதிவு) ல் கீழ்க்காணும் அம்சங்கள் பற்றிய தகவலைப் பெறுங்கள்:
    • ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனை (Transactions) அல்லது மாஸ்டருக்காக (Masters) உருவாக்கப்பட்ட பதிவுகளின் எண்ணிக்கைக்கான பதிப்பு எண்.
    • உருவாக்குதல், மாற்றுதல் மற்றும் நீக்குதல் போன்ற செயல்பாடுகளின் தன்மை.
    • ஒரு செயல்பாட்டைச் செய்த உபயோகிப்பாளர் விவரம்.
    • ஒரு செயல்பாடு நிகழ்ந்த நாள் மற்றும் நேரம்.
  • துருவிச் செல்வதன் மூலம் முந்திய பதிப்போடு விவரங்களை ஒப்பிடலாம். கூடுதலாக, வெவ்வேறான விதமான மதிப்புகளை ஒப்பிடுமாறு வடிவமைக்கலாம் (Configure). எடுத்துக்காட்டாக, மாற்றப்பட்ட மதிப்புகளை மற்றும் வடிமைப்பு(Configure) மதிப்புகளை ஒப்பிடலாம்.
  • கீழ்க்காண்பவற்றில் மாற்றப்பட்ட மற்றும் அழிக்கப்பட்டவற்றைப் பார்க்கலாம்:
    • நாளேட்டில் (Daybook) உள்ள சான்றுச் சீட்டுகள் (Vouchers) மற்றும் பேரேடுகளின் (Ledgers) சான்றுச் சீட்டு அறிக்கைகள்
    • மாஸ்டர் (Masters) ஸ்ன் Chart of Accounts.
  • சேமித்த அறிக்கைப் பார்வைகளைத் (Report views) தக்க வைத்துக் கொண்டு, தடையின்றித் தரவை (Data Migration) மேம்படுத்தலாம்.

இன்னும் வேறென்ன!

உங்கள் வணிகத்தில் Edit log (திருத்தப்பதிவு) கிற்கான தேவையைப் பொறுத்து இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்:

  • TallyPrime Edit Log (டேலிபிரைம் திருத்தப் பதிவு) வெளியீடு 2.1: இந்த வசதி நீக்க இயலாத வசதியாக இருப்பதால், நிதியாண்டு முழுவதும் பரிவர்த்தனைகள் (Transactions) மற்றும் மாஸ்டர்களில் (Masters) உள்ள அனைத்து செயல்பாடுகளுக்கும் பதிவுகள் (Log) உருவாக்கப்படுவதை இது உறுதி செய்கிறது.
  • TallyPrime (டேலிப்ரைம்) வெளியீடு 2.1: தேவைப்படும் போது திருத்தப்பதிவை (Edit log) செயல்படுத்தி மாற்றங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கலாம். இது பரிவர்த்தனை (Transactions) அல்லது மாஸ்டர்களில் (Masters) நடக்கும் மாற்றம் (Modifications), அழிப்புகளின் (Deletions) மீதான உங்களின் கட்டுப்பாட்டை உறுதி செய்யும்.

மேலும் தெரிந்து கொள்ள Edit Log in TallyPrime தலைப்பைப் பார்க்கவும்.

பிடிஃப் (PDF) ஆவணங்களில் மின்ணனுக் கையொப்பத்தை (Digital Signature) இணைத்தல்

TallyPrime (டேலிப்ரைம்) வெளியீடு 2.1 மற்றும் TallyPrime Edit Log (டேலிப்ரைம் திருத்தப்பதிவு) வெளியீடு 2.1  டாங்கிள் (Dongle) அடிப்படையிலான மின்னணுக் கையொப்பத்தை (Digital Signature) ஆதரிக்கின்றன.

இனி நீங்கள் சிக்கலில்லாமல் சான்றுச்சீட்டுகள் (Vouchers), அறிக்கைகள் (Reports) போன்ற ஆவணங்களில் கீழ்க்காணும் வேலைகளின் போது மின்னணுக் கையொப்பமிடலாம் (Digital Signature):

  • ஆவணங்களை பிடிஎஃப்பாக (PDF) ஏற்றுமதி (Export) செய்யும் போது
  • பிடிஎஃப் (PDF) ஆவணங்களை மின்னஞ்சல் (E-mail) செய்யும்போது
  • அச்சிடும் (Print) நேரத்தில் ஆவணங்களை பிடிஎஃப்பாக (PDF) சேமிக்கும்போது.

மேலும், அனைத்து சான்றுச்சீட்டுகளும் (Vouchers) மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ள உறுதியோடு மின்னணுக் கையொப்பத்தை(Digital signature) பல்சான்றுச்சீட்டு (Multi-voucher) அறிக்கைகளில் இணைக்கலாம்.

மின்னணுக் கையொப்பமிட்டால் (Digital signature), நம்பகத்தன்மை மற்றும் நாணயம் உறுதி ஆவதோடு போலி, சேதாரம் தவிர்க்கப்பட்ட பிடிஎஃப்(PDF) ஆவணங்களை பங்குதாரர்கள், தணிக்கையாளர்கள், பட்டயக் கணக்காளர்களோடு (Chartered Accountants) பகிரவும் முடியும்.

மேலும் தெரிந்து கொள்ள Digital Signature in TallyPrime தலைப்பைப் பார்க்கவும்.

இன்னும் வேறென்ன!

உங்களால் பல்சான்றுச்சீட்டு (Multi Voucher) அறிக்கைகளை அச்சிடவும் (Print), ஏற்றுமதி (Export), மின்னஞ்சல் (E-mail) செய்யவும் முடியும்.

மேலும் தெரிந்து கொள்ள Multi-Voucher/Invoice for a selected party  தலைப்பைப் பார்க்கவும்.

Post a Comment

Is this information useful?
YesNo
Helpful?