HomeTallyPrimeWhat's New | Release NotesRelease 4.0 - தமிழ்

 

Explore Categories

 

 PDF

TallyPrime மற்றும் TallyPrime Edit log Release 4.0க்கான ரிலீஸ் நோட் | என்ன புதுமை!

TallyPrime மற்றும் TallyPrime Edit Log Release 4.0 பின்வருவனவற்றின் மூலம் உங்களுக்கு மிகுந்த உற்சாகக்கதையும் மகிழ்ச்சியையும் தருகிறது:

  • உங்கள் வணிகக் கட்டுரைகளான வவுச்சர்கள் மற்றும் ரிப்போர்ட்ஸ் போன்றவற்றை ஒரு நொடியில் WhatsApp மூலம் பகிரும் வசதி
  • MS Excel பார்மட் பராமரிக்கப்படும் மாஸ்டர்ஸ் மற்றும் ட்ரான்ஸாக்ஷன்ஸ் Import செய்வதற்கான எளிய வழி
  • உங்கள் வணிக ஆரோக்கியத்தைப் பற்றிய விரைவான பார்வையை வழங்கும் அதிநவீன Dashboard

மேலும், GST மற்றும் Payment Request போன்ற தொகுதிகளில் உள்ள மேம்பாடுகள் மற்றும் Invoice ல் previous மற்றும் current balances ப்ரிண்ட் செய்வதற்கான வசதி மற்றும் பிற மேம்பாடுகள் ஆகியவை TallyPrime உடனான உங்கள் அனுபவத்தை பயனுள்ளதாக்குகின்றன.

சிறப்பம்சங்கள் – TallyPrime மற்றும் TallyPrime Edit log ரிலீஸ் 4.0

TallyPrime Release 4.0 புதிய மற்றும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது, இது உங்கள் அனுபவத்தை இன்னும் மகிழ்ச்சிகரமாக்கும்.

  • WhatsApp for Business உடன் TallyPrime
  • MS Excel இலிருந்து டேட்டாவை இம்போர்ட் செய்யவும்
  • க்ராபிக்கல் Dashboard

வணிக விவரங்களின் உடனடிப் பகிர்வு | TallyPrime with WhatsApp for Business

வணிகங்களுக்கும் அவற்றின் பங்குதாரர்களுக்கும் இடையிலான தடையற்ற மற்றும் திறமையான தகவல்தொடர்புகளின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, WhatsApp for Business மூலம் உடனடித் தொடர்பு கொள்ளும் ஆற்றலை TallyPrime Release 4.0 உங்களுக்கு வழங்குகிறது. சந்தையை ஆளும் தொழில்நுட்ப மேம்பாடுகள் மற்றும் தகவல்தொடர்பு அனுபவ மேம்பாடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ள இது உதவுகிறது.

வணிகங்கள் TallyPrime இலிருந்து நேரடியாக ஆவணங்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினருக்கு அல்லது பங்குதாரர்களுக்கு ஒரே கிளிக்கில் அனுப்பலாம். காலாண்டில் உங்கள் புத்தகங்களை மூடிவிட்டீர்கள் என்று கருதுங்கள். WhatsApp ல் உங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய பங்குதாரர்களுக்கு டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட நிதிநிலை அறிக்கைகளை அனுப்பலாம். இதேபோல், உங்கள் பார்ட்டிகளுக்கு WhatsApp வழியாக இன்வாய்ஸ்கள் மற்றும் ரிமைண்டர் லெட்டர்ஸ் அனுப்பலாம் மேலும் அவர்களிடமிருந்து பதில்களை WhatsApp மூலம் பெறலாம். தகவல்தொடர்புகள் உடனுக்குடன் இருப்பதால் பணப்புழக்கத்தை சிறப்பாக நிர்வகிக்க இது உதவும்.

உங்கள் வணிகம் இந்தியாவில் இருந்தால், உடனடிப் பணம் செலுத்த, WhatsApp வழியாக அனுப்பப்படும் இன்வாய்ஸ்கள் மற்றும் ரிமைண்டர் லெட்டர்களில் உள்ள பேமெண்ட் URLகளைக் கிளிக் செய்வதற்கான நெகிழ்வுத்தன்மையை உங்கள் உள்நாட்டுக் பார்ட்டிகள் பெறுகின்றன.

WhatsApp இப்போது TallyPrime உடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. TallyPrime இலிருந்து WhatsApp for Business உடன் பதிவு செய்து, ஒன்று அல்லது பல தரப்பினருக்கு அல்லது பங்குதாரர்களுக்கு ஒரே நேரத்தில் ஆவணங்களை அனுப்பலாம். ஈமெயில் மூலம் ஆவணங்களை அனுப்பும் வசதியை TallyPrime தக்கவைத்துக்கொண்டாலும், பெறுநர் எந்த ஈமெயில்லையும் எப்போது பார்ப்பார் என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்.

எந்த சாப்ட்வேலிருந்தும் TallyPrimeக்கு எளிதாக மைகிரேஷன் | MS Excel இலிருந்து டேட்டாவை இம்போர்ட் செய்யவும்

அதிக அளவு தரவுகளுக்கான மேனுவல் டேட்டா என்ட்ரி என்பது எந்தவொரு வணிகத்திற்கும் ஒரு கனவாகும். மேனுவல் என்ட்ரி என்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் மற்றும் பிழை ஏற்படக்கூடியது. இதைத் தீர்க்க, TallyPrime Release 4.0 MS Excel இலிருந்து தடையற்ற இறக்குமதியை வழங்குகிறது. XML files களை இம்போர்ட் செய்வதற்கான தற்போதைய ஆப்ஷனுடன் இது கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் அனுபவித்திருப்பதைப் போல, பல சாப்ட்வேர்கள் Excel க்கு டேட்டாவை எக்ஸ்போர்ட் செய்ய அனுமதிக்கின்றன. இது Excel Workbooks களில் டேட்டாவைப் பெறவும் மற்றும் TallyPrime க்கு இம்போர்ட் செய்யவும் உங்களை அனுமதிக்கிறது.

புதிதாக என்ன இருக்கிறது:

  • எக்செல் இலிருந்து மாஸ்டர்ஸ் மற்றும் ட்ரான்ஸாக்ஷன்ஸ் சிரமமின்றி இம்போர்ட் செய்யலாம் .
  • டிபால்ட் டெம்ப்ளேட்கள்/Sample Excel filesகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
  • எந்த Excel Workbook லும் தொகுக்கப்பட்ட டேட்டாவை எடுத்து, பார்மட் அல்லது வரிசையைப் பொருட்படுத்தாமல், TallyPrime இல் பில்ட்ஸ்களுக்கு மேப் செய்யலாம்.
  • இம்போர்ட் செய்யும் போது உருவாக்கப்பட்ட பதிவுகளிலிருந்து இம்போர்ட்ன் போது ஏற்பட்ட பிழைகளை அடையாளம் காணவும்.

நிதி நுண்ணறிவுகளை உருவாக்குவதற்கான விசுவல் டூல் | க்ராபிக்கல் Dashboard

உள்ளுணர்வு பார்மட்களைப் பயன்படுத்தி வணிகத் தகவலைப் பகுப்பாய்வு செய்ய, TallyPrime இல் Dashboard களைப் பயன்படுத்தலாம். டிபால்ட்டாக வழங்கப்படும் Sales மற்றும் Purchase களைத் தவிர, நீங்கள் வெவ்வேறு Dashboardகளை உருவாக்கலாம். உங்கள் தேவைகளின் அடிப்படையில், நீங்கள் வெவ்வேறு ரிப்போர்ட்ஸ்களை தனித்தனி tilesகளாகச் சேர்க்கலாம், பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒவ்வொரு tilesகளையும் தேவைக்கேற்ப காண்பிகர்  செய்துகொள்ளலாம் . நீங்கள் வணிக உரிமையாளராகவோ, நிதி மேலாளராகவோ அல்லது ஆலோசகராகவோ இருந்தாலும், வளர்ச்சி மற்றும் வெற்றியைத் தூண்டும் டேட்டா சார்ந்த முடிவுகளை எடுக்க Dashboard உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. உங்கள் பணப்புழக்கத்தைக் கண்காணிக்கவும், வருவாய்ப் போக்குகளைக் கண்காணிக்கவும், செலவு முறைகளைப் பகுப்பாய்வு செய்யவும், மேலும் உங்கள் நிதி நிலை மற்றும் உங்கள் விருப்பத்தின்படி லெட்ஜர் பேலன்ஸ் பற்றிய விரிவான பார்வையைப் பெறவும் கிராப் /சார்ட்ஸ் களை வெவ்வேறு Tiles களில் பயன்படுத்தலாம்.

TallyPrime இல் உள்ள Dashboard நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது:

  1. Tiles களைச் சேர்க்கவும் அல்லது மறைக்கவும், ஒவ்வொரு Tiles யும் தனித்தனியாக காண்பிகர்  செய்யவும், டேட்டா புள்ளிகளைச் சேர்க்கவும் அல்லது விலக்கவும்  மற்றும் பல.
  2. பயனர் உரிமைகளின் அடிப்படையில் Dashboard அனுமதியை கட்டுப்படுத்தவும். குறிப்பிட்ட பயனர்கள் குறிப்பிட்ட டைல்களுக்கான அனுமதியை கட்டுப்படுத்தியிருந்தால், அத்தகைய Tiles கள் அந்த பயனர்களுக்கான Dashboard ன் பகுதியாக இருக்காது.
  3. வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு Dashboard களை உருவாக்கவும், உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப Tiles களை ஒழுங்கமைக்கவும் மற்றும் View களைச் Save செய்யலாம்.
  4. நீங்கள் ஒரு Company யை  திறக்கும்போது, ​​Dashboard டை Home Screen க ஏற்றலாம்.
  5. ஈமெயில் அல்லது WhatsApp மூலம் ப்ரிண்ட் , எக்ஸ்போர்ட் செய்யவும் மற்றும் பங்குதாரர்களுடன் பகிரலாம்.

TallyPrime மற்றும் TallyPrime Edit log Release 4.0 – ப்ராடக்ட் மேம்பாடுகள்  

இன்வாய்ஸ்லில் Previous மற்றும் Current Balance களை ப்ரிண்ட் செய்தல் 

இன்வாய்ஸ் ப்ரிண்ட் செய்யும் அனுபவம் மேலும் சிறந்ததாக மற்றும் முடிவு சார்ந்ததாக உள்ளது, ஏனெனில் இன்வாய்ஸ் ப்ரிண்ட் செய்யும் நேரத்தில் பார்ட்டியின் Previous மற்றும் Current Balance களைக் நீங்கள் ப்ரிண்ட் செய்யலாம் .

QRMP டீலர்களுக்காக ஒரே JSON files ல் ஒரு காலாண்டுக்கு GSTR-3B ஐ எக்ஸ்போர்ட் செய்தல் 

QRMP டீலர்கள் இப்போது GSTR-3B ஐ ஒரு JSON files ல் ஒரு காலாண்டுக்கு எக்ஸ்போர்ட் செய்து, GST போர்ட்டலில் அப்லோட் செய்து GSTR-3Bஐப் பதிவு செய்யலாம்.

பார்ட்டி GSTIN/UIN ஐ GSTR-3B இன் பிரிவில் உள்ள Input Tax Credit Available மூலம் பார்க்கும் வசதி

Input Tax Credit Available பிரிவில் இருந்து உள்நுழைந்து , பார்ட்டி வாரியாக வவுச்சர்களைப் பார்க்கும்போது, ​​பார்ட்டி GSTIN/UINஐயும் பார்க்கலாம்.

TallyPrime இலிருந்து TallyEdge யை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

TallyEdge  உங்கள் அக்கௌன்ட் அஃகிரிகெட்டோர் பற்றி தெரிந்து தெரிந்துகொள்வது இப்போது எளிதாக உள்ளது, ஏனெனில் TallyPrime இல் உள்ள Help மெனு மூலம் நீங்கள் அதைக் கண்டறியலாம்.

TallyPrime இலிருந்து TallyPrime Powered by AWS யை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

TallyPrime Powered by AWS பற்றி தெரிந்து தெரிந்துகொள்வது இப்போது எளிதாக உள்ளது, ஏனெனில் TallyPrime இல் உள்ள Help மெனு மூலம் நீங்கள் அதைக் கண்டறியலாம்.

சமீபத்திய FVU Tool 8.2 இன் படி TDS மற்றும் TCS ரிட்டர்ன்களை எக்ஸ்போர்ட் செய்தல்.

சமீபத்திய FVU Tool 8.2 இன் படி பின்வரும் ரிட்டர்ன் ரிப்போர்ட்ஸ்களை நீங்கள் இப்போது எக்ஸ்போர்ட் செய்யலாம்:

  • TDS Form-24Q
  • TDS Form-26Q
  • Form-27Q
  • TCS Form-27EQ

GSTR-1 Document Summary ல் கேன்சேல்ட் வவுச்சர்களின் எண்ணிக்கை

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சேல்ஸ் இன்வாய்ஸ்களை கேன்சேல் செய்யும் போது, ​​அனைத்து மாதங்களிலும் Cancelled Vouchers எண்ணிக்கை GSTR-1 Document Summary ல் சேர்க்கப்படும்.

RCM இல் GST லெட்ஜர்கள் மற்றும் அன்-ரெஜிஸ்டர்ர்ட் பதிவு செய்யப்படாத டீலர்களுடனான ட்ரான்ஸாக்ஷன்ஸ் (URD)

நீங்கள் இப்போது RCM Purchase வவுச்சர்கள் மற்றும் URD களில் இருந்து வாங்கும் Purchase வவுச்சர்களில் GST லெட்ஜர்களைச் சேர்க்கலாம், மேலும் இந்த வவுச்சர்கள் ரிட்டர்னில் சேர்க்கப்படும்.

GST ஓவர்ரைடுக்கு பிறகு GST Rate யை புதுப்பித்தல்

நீங்கள் GST Rate ஓவர்ரைடு செய்தாலும், வவுச்சர்களில் GST Rate உறுதியாக புதுப்பிக்கப்படும். 

Use common ledger for item allocation configuration  பயன்படுத்துவது இல்லை என்றாலும், நீங்கள் இப்போது GST Rate யைப் தடையின்றி ஓவர்ரைடு செய்யமுடியும், மேலும் ஜிஎஸ்டி தொகை புதுப்பிக்கப்படும்.

Job work out order களில் Company ன் GSTIN/UIN ப்ரிண்ட் செய்தல் 

GSTIN/UIN இப்போது Job work out order களில் ப்ரிண்ட் செய்யலாம்.

  1. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட GST ரெஜிஸ்டரேஷனில், GST ரெஜிஸ்டரேஷன் (வவுச்சரை உருவாக்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்டது) மற்றும் State code யைப் ப்ரிண்ட் செய்யலாம்.
  2. ஒற்றை GST ரெஜிஸ்டரேஷன் விஷயத்தில், நீங்கள் GSTIN/UIN மற்றும் State code விவரங்களை More detail யைப் பயன்படுத்தி என்டர் செய்து அதையே ப்ரிண்ட் செய்யலாம்.

GSTR-1 HSN Summary இல் Total Value Field யை MS Excel மற்றும் CSV இல் எக்ஸ்போர்ட் செய்யலாம். 

GSTR-1 HSN Summary யை MS Excel அல்லது CSV ஐ எக்ஸ்போர்ட் செய்யும் அனுபவம் இப்போது மிகவும் சிறப்பாக உள்ளது.

GSTR-1 HSN Summary யை MS Excel அல்லது CSV file ஆக எக்ஸ்போர்ட் செய்யும் போதும், Total value field இப்போது மொத்த GST தொகையுடன் காட்டப்படும்.

GSTR-3B இன் Nature view இல் சில பரிவர்த்தனைகளுக்கு Taxable மற்றும் Tax தொகை இரட்டிப்பாகும்

முன்பு, ஒரு ட்ரான்ஸாக்ஷன்ஸ் இரண்டு வெவ்வேறு பிரிவுகளில் சேர்க்கப்படும் போது, ​​Taxable மற்றும் Tax தொகை இரட்டிப்பாகும்.

Nature view இல் GSTR-3B ஐப் பார்ப்பது இப்போது மிகவும் எளிதாக உள்ளது, ஏனெனில் நீங்கள் சரியான Taxable மற்றும் Tax தொகையைப் பார்க்க முடியும்.

GSTR-3B இல் இம்போர்ட் சேவைகளை செய்ததற்காக பதிவு செய்யப்பட்ட வவுச்சர்கள்.

வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட இம்போர்ட் சேவைகளின் பதிவுசெய்யப்பட்ட வவுச்சர்கள் 4 ஏ. Input Tax Credit Available பிரிவில் மட்டுமே சேர்க்கப்படும், மேலும் அவை 3.1டியின் Inward Supplies (applicable for Reverse Charge) பிரிவில் ஒரு பகுதியாக இருக்காது.

மற்றொரு சாப்ட்வேலிருந்து டேட்டா இம்போர்ட் செய்தாலும், GSTR-1 இன் தடையற்ற எக்ஸ்போர்ட் .

வேறொரு சாப்ட்வேலிருந்து  டேட்டா இம்போர்ட் செய்யப்பட்டாலும் கூட, TallyPrime இலிருந்து GSTR-1 இன் எக்ஸ்போர்ட் இப்போது தடையின்றி உள்ளது.

Purchase வவுச்சர்கள் உடன் அதே Bill of Entry no.

இப்போது நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட Purchase வவுச்சர்களை ஒரே Bill of Entry No. மூலம் பதிவு செய்யலாம், மேலும் இந்த ட்ரான்ஸாக்ஷன்ஸ் ரிட்டர்னில் சேர்க்கப்படும்.

UoM பொருந்தாதபோது GST போர்ட்டலில் வவுச்சர் பதிவேற்றம்.

பின்வரும் வசதிகளுடன் யூனிட் அப் மெஷர்மென்ட் இல்லாத ஸ்டாக் ஐட்டம்களுடன் வவுச்சர்களை இப்போது அப்லோட் செய்யலாம் :

  • ஸ்டாக் ஐட்டம்களுடன் உருவாக்கப்பட்ட வவுச்சர் UoM ஐ OTH ஆகக் காண்பிக்கும்.
  • சேவைகளுக்காக உருவாக்கப்பட்ட வவுச்சர் UoM ஐ NA ஆகக் காண்பிக்கும்.

GST டேட்டாக்களுடன் வவுச்சர்களை தடையின்றி உருவாக்குதல்.

GST தொடர்பான தகவல்களுடன் வவுச்சர் உருவாக்கம் இப்போது மிகவும் மென்மையாக இருக்கிறது, ஏனெனில் வவுச்சர் உருவாக்கும் போது நீங்கள் எந்த சவால்களையும் பிழைகளையும் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

HSN/SAC, டிஸ்கிரிப்ஷன் மற்றும் பார்ட்டி GSTIN ஆகியவை Excel இல் ODBC மூலம் எக்ஸ்போர்ட் செய்தல்.

HSN/SAC, டிஸ்கிரிப்ஷன் மற்றும் பார்ட்டி GSTIN ஆகியவை ODBC மூலம் எக்ஸ்போர்ட் செய்யப்படும் போது MS Excel file இல் எக்ஸ்போர்ட் செய்யப்படவில்லை .

இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டது.

HSN/SAC இன் நீளத்தைப் பொருட்படுத்தாமல் TallyPrime இன் மென்மையான இயக்கம்

TallyPrime இப்போது GSTR-1 மற்றும் GSTR-3B ஐத் திறக்கும் போது, ​​ட்ரான்ஸாக்ஷன்ஸ்களில் HSN/SAC இன் நீளம் 1024 எழுத்துகளைத் தாண்டியிருந்தாலும் கூட, தொடர்ந்து சீராக இயங்கும்.

TallyPrime Release 4.0 தடையற்ற மைகிரேஷன்

நீங்கள் TallyPrime Release 2.1 அல்லது அதற்கு முந்தைய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், பின்வரும் காரணங்களுக்காக நிகழும் மெமோரி தொடர்பான பிழைகள் இல்லாமல் உங்கள் Company டேட்டாவை TallyPrime-க்கு இப்போது நீங்கள் தடையின்றி மைகிரேஷன் செய்ய முடியும்:

  • Company ன் டேட்டாஅளவு அல்லது வவுச்சர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • வவுச்சர்களில் ஸ்டாக் ஐட்டம்கள் அல்லது சர்வீசஸ் ஸ்லாப் அடிப்படையிலான ரேட்கள் உள்ளன, அங்கு Include Expenses for slab calculation காண்பிரேஷன்  இயலசெய்யலாம். 

நீங்கள் TallyPrime Release 3.0 அல்லது 3.0.1 இல் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் மைகிரேஷன் செயல்முறையைச் செய்ய வேண்டியதில்லை. TallyPrime Release 4.0 இல் உங்கள் நிறுவனத்தின் டேட்டாவை  திறந்து உங்கள் வேலையைத் தொடரலாம்.

UPI மூலம் பேமெண்ட் ரெகுஸ்ட் கோரிக்கைகளுக்கு பகுதியளவு பணம் செலுத்துதல்

நீங்கள் UPI மூலம் பேமெண்ட் ரெகுஸ்ட் அனுப்பும்போது, ​​உங்கள் வாடிக்கையாளர்கள் இப்போது தொகையை மாற்றி, பகுதியளவு பணம் செலுத்த முடியும்.

கேஷ் லெட்ஜருடன்கூடிய ட்ரான்ஸாக்ஷன்ஸ்களுக்கான பேமெண்ட் ரெகுஸ்ட்க்கான QR குறியீடுகள்

கேஷ் லெட்ஜரில் ட்ரான்ஸாக்ஷன்ஸ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பேமெண்ட் ரெகுஸ்ட்க்கான QR குறியீடு உருவாக்கலாம்.

GST முடக்கப்பட்டிருக்கும் போது, சிம்பிள் இன்வாய்ஸ்களை பார்மட்டில் பேமெண்ட் ரெகுஸ்ட்க்கான QR குறியீட்டை ப்ரிண்ட் செய்தல்

F11 (Company பியூச்சர்) இன் கீழ் GST முடக்கப்பட்டிருந்தாலும் கூட, பேமெண்ட் ரெகுஸ்ட்க்கான QR குறியீட்டை சிம்பிள் இன்வாய்ஸ் பார்மட்டில் ப்ரிண்ட் செய்யலாம்.

ப்ரிண்ட் செய்வதற்கு முன் Payment link யை உருவாக்குகிறது.

நீங்கள் ஒரு வவுச்சரை உருவாக்கும்போது, ​​ப்ரிண்ட் செய்வதற்கு முன் பேமெண்ட் லிங்க் உருவாக்குவதற்கு TallyPrime உங்களுக்கு உதவும்.

Generate Payment link/QR code after saving voucher மற்றும் Print voucher after saving காண்பிரேஷணை வவுச்சர் டைப் மாஸ்டரில் இயலசெய்தால் இது நடக்கும்.

ப்ரிண்ட் செய்வதற்கு முன் பேமெண்ட் லிங்க் உருவாக்குவது, ப்ரிண்டில் பேமெண்ட் ரெகுஸ்ட்க்கான பேமெண்ட் லிங்க் மற்றும் QR குறியீடு இரண்டும் இருப்பதை உறுதி செய்கிறது.

தடையற்ற e-Invoice உருவாக்கம்

e_Invoice உருவாக்கம் இப்போது மிகவும் தடையற்றது, ஏனெனில் நீங்கள் இப்போது பின்வரும் சூழ்நிலைகளில் e-Invoice யை  வெற்றிகரமாக உருவாக்க முடியும்:

  • இன்வாய்ஸில் ஒரு கன்ஸயினீக (consignee) அரசாங்க நிறுவனம் உள்ளது.
  • e-Way bill க்கு மாநிலங்களுக்கு இடையேயான ட்ரான்ஸாக்ஷன்ஸ்க்கு பொருந்தாது.

மேலும், ஸ்டாக் ஐட்டம்கள் அல்லது சர்வீசஸ் விற்பனைக்காக e-Invoice உருவாக்கும் போது ValDtls fields is required நீங்கள் எதிர்கொள்ள மாட்டீர்கள்.

மல்டி இன்வாய்ஸ் ப்ரிண்ட்க்கான சேல்ஸ் இன்வாய்ஸில் QR குறியீடு

QR குறியீட்டுடன் கூடிய மல்டி இன்வாய்ஸ் ப்ரிண்ட் இப்போது குறைபாடற்றது.

நீங்கள் மல்டி இன்வாய்ஸ் ப்ரிண்ட் செய்யும்போது, ​​அனைத்து இன்வாய்ஸ்களிலும் இப்போது QR குறியீடு இருக்கும்.

இ-இன்வாய்ஸுடன் இ-வே பில் ப்ரிண்ட் செய்தல் 

நீங்கள் ப்ரிண்ட் செய்யும் இ-வே பில்லுடன் இ-இன்வாய்ஸ் (F12 இன் கீழுள்ள இன்வாய்ஸ் ​​காண்பிரேஷன்) இயலசெய்தால், ​​காண்பிரேஷன்  ஒரு இன்வாய்ஸ்க்கு மட்டுமே பயன்படும்.

நீங்கள் TallyPrime ஐ சட்டௌன் (Shut) செய்தலும் அல்லது வேறு கம்பெனியை மாற்றினாலும்,  இந்த காண்பிரேஷன்  இப்போது அனைத்து இன்வாய்ஸ்களுக்கும் செயல்படுத்தப்படும்.

கிளையண்ட் கம்ப்யூட்டரில் பணிபுரியும் போது டெலிவரி நோட்களில் ஆர்டர் நம்பர் தேர்வு

மல்டி-யூசர்  என்விரான்மென்டில் கிளையன்ட் கம்ப்யூட்டரில், டெலிவரி நோட் உருவாக்கும் போது, ​​பார்ட்டியின் ஆர்டர் எண்ணைத் தேர்ந்தெடுக்கும் நேரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.

இப்போது மேம்படுத்தப்பட்ட செயல்திறனுடன், நீங்கள் ஒரு நொடியில் ஆர்டர் எண்ணைத் தேர்ந்தெடுக்க முடியும்.

பிரௌசரில் இருந்து டவுன்லோட் செய்த பிறகு சேல்ஸ் இன்வாய்ஸின் தலைப்பு

பிரௌசரில் இருந்து சேல்ஸ் இன்வாய்ஸ் பதிவிறக்கும் போது, ​​இன்வாய்ஸின் தலைப்பு டாக்ஸ் இன்வாய்ஸில் (Tax Invoice) இருந்து சப்ளை பில் ஆக மாறும்.

நீங்கள் பிரௌசரில் இருந்து டவுன்லோட் செய்யும்போது, ​​சேல்ஸ் இன்வாய்ஸ் தலைப்பு இப்போது டாக்ஸ் இன்வாய்ஸாக (Tax Invoice) தக்கவைக்கப்படும்.

வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable Income)  ரூ. 7,00,000 மற்றும் ரூ. 7,27,777-க்கு இடையில் உள்ள ஊழியர்களுக்கான Marginal Tax Relief 

Marginal Tax Relief என்பது புதிய வரி விதிப்பைத் தேர்வு மற்றும் வரிக்கு உட்பட்ட வருமானம் (Taxable Income)  ரூ. 7,00,000 மற்றும் ரூ. 7,27,777 இடையில் உள்ள ஊழியர்களுக்கு  இப்போது பொருந்தும். 

சப்-குரூப்பின் கீழ் உருவாக்கப்பட்ட லெட்ஜருடன் இன்வாய்ஸில் GCC VAT விவரங்கள்

பிக்சட் அஸெட்ஸ் போன்ற சப்-குரூப்பின் கீழ் உருவாக்கப்பட்ட லெட்ஜரை நீங்கள் பயன்படுத்தியபோது, ​​GCC VAT விவரங்கள் தக்கவைக்கப்படவில்லை.

லெட்ஜர் மற்றும் அதன் சப்-குரூப் பொருட்படுத்தாமல், GCC VAT விவரங்கள் தக்கவைக்கப்படும் என்பதால், GCC VAT விவரங்களுடன் இன்வாய்ஸ் உருவாக்குவதில் நீங்கள் இப்போது மென்மையான அனுபவத்தைப் பெறுவீர்கள்.

TallyHelpwhatsAppbanner
Is this information useful?
YesNo
Helpful?
/* */